தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் பிஎஸ்என்எல் சிம் விற்பனை, ரீசார்ஜ், மற்றும் எம்என்பி (MNP) சேவைகளை பொது மேலாளர் பால சந்திர சேனா தொடங்கி வைத்தார். இந்த சேவை தஞ்சை வணிகப் பகுதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். 4ஜி சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், 3ஜி சிம் வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள சேவை மையங்களில் இலவசமாக 4ஜி சிம் பெறலாம்.