வானில் சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதே சந்திர கிரகணம் ஆகும். இந்த ஆண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடைகிறது. சந்திரனின் முழுமையான சிவப்பு நிறம் மாலை 4.34 மணி முதல் மாலை 5.33 மணி வரை தோன்றும். கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் காலை நேரத்தில் நடை சாத்தப்பட்டன. தஞ்சை பெரிய கோயிலும் இன்று நடை சாத்தப்பட்டு, இரவு 7.30 மணிக்கு திறக்கப்படும்.