தஞ்சையில் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உயர்த்த வேண்டும், எஃப்சி கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டோ சங்க மாநகர தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் ஜெயபால், கௌரவத் தலைவர் வடிவேலன், மாவட்ட நிர்வாகிகள் பேர் நீதியாழ்வார், அன்பு மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் ராஜன், மணிமாறன், ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.