11 நாட்கள் நடந்த இந்த விழாவில் தினமும் வாராகி அம்மனுக்கு காலையில் அபிஷேகமும் தொடர்ந்து இனிப்பு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்தன. நிறைவு நாளான நேற்று 5ம் தேதி வராகி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலை வாண வேடிக்கையுடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வராஹி அம்மன் எழுந்தருளி 4 ராஜவீதிகளில் வீதிஉலா நடந்தது. தொடர்ந்து பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து