தஞ்சாவூர்: நாளை மின்தடை மக்களே தயாரா?

தஞ்சாவூரில் நாளை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நகரிய உதவி செயற்பொறியாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையிலுள்ள நகரத் துணை மின் நிலையத்தில் நாளை (10ம் தேதி) பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகர், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதர் நகர், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோயில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயில்வே, சாந்தபிள்ளை கேட், மகர் நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல் காப்பியர் சதுக்கம், வி. பி. கோயில், சேவியர் நகர், சோழன் நகர், கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் சாலை, ஜோதி நகர், ஆடக்காரத் தெரு, 

ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் திரையரங்கம் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழ வாசல், எஸ். என். எம். ரஹ்மான் நகர், அரிசிக்காரத் தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடி வாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தா பாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டி ராஜபாளையம், மகளிர் காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி