தஞ்சை: 1000 கிலோ அன்னத்துடன் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்

தஞ்சை பெரியகோவிலில் நேற்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி, பெருவுடையாருக்கு 1000 கிலோ பச்சரிசி சாதம், 500 கிலோ காய்கனிகள் மற்றும் இனிப்புகள் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது. பின்னர் பல்வேறு காய்கனிகள், பழங்கள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி