தஞ்சை: பால் விநியோகத்தில் தட்டுப்பாட்டால் முகவர்கள் கவலை

தஞ்சை ஆவின் பால்பண்ணையிலிருந்து கடந்த 25 நாட்களாக முகவர்களுக்கான பால் விநியோகம் (காலை, மாலை தலா 60 லிட்டர்) குறைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுத் தங்களின் வணிகம் பாதிக்கப்படுவதாக முகவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால், கோடைகால உற்பத்தி சரிவு மற்றும் கொள்முதல் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, பால் உற்பத்தியை அதிகரித்து தடையின்றி பால் வழங்க வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி