தஞ்சாவூர் மோரிஸ் கார்னர் பகுதியில் உள்ள தனியார் துரித உணவகத்தில் கடந்த 18-ஆம் தேதி ஏசி சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த உணவக ஊழியர் ரவிராஜ் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், ஏசி மெக்கானிக் கணேசனும் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காயமடைந்த 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தஞ்சாவூர் தெற்கு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.