தஞ்சாவூர்: கோட்ட அலுவலகங்களில் ஜுன். 15 முதல் ஆதார் முகாம்

தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் மாபெரும் ஆதார் சிறப்பு முகாம் ஜூன் 16 தொடங்கி, ஜூலை 15 வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கு. தங்கமணி தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்திலுள்ள அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகங்கள், தஞ்சாவூர், மன்னார்குடி, பாபநாசத்துக்குட்பட்ட ஆதார் சேவை மையம் உள்ள துணை அஞ்சல் அலுவலகங்களில் நடைபெறும் 

முகாமில் பொதுமக்கள் புதிதாக ஆதார் பதிவு, பழைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி, கைபேசி எண் திருத்தம், கைரேகை, புகைப்படம் புதுப்பித்தல் ஆகிய சேவைகளைச் செய்து கொள்ளலாம். புதிதாக ஆதார் பதிவு செய்தல் இலவசமாகவும், பழைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி, கைபேசி எண் திருத்தம் செய்ய ரூ. 50 மற்றும் கைரேகை, புகைப்படம் புதுப்பித்தல் செய்ய ரூ. 100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தகுந்த ஆவணங்களைக் கொண்டு வந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ள இந்தச் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி