தஞ்சாவூர் மாவட்டம் சுப்பம்மாள்சத்திரம் மீனவ கிராமத்தில் மீன்பிடித் துறைமுகத்தைத் தூர்வாரக் கோரியும், சாலை மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வலியுறுத்தியும் மீனவர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மற்ற கிராமங்களில் தூர்வாரும் பணிகள் நடக்கும் நிலையில், தங்கள் கிராமம் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து 03.03.2026 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தயார் சுல்தான் தலைமை வகித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் எச்சரித்து மனு அளித்துள்ளனர்.