திருமணக் கோலத்தில் தேர்வெழுதிய மாணவிகள்

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பி.எட். பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், கும்பகோணம் சோழபுரத்தைச் சேர்ந்த மதுமிதா மற்றும் பட்டுக்கோட்டை கரம்பயத்தைச் சேர்ந்த சத்யகீதா ஆகிய இரு மாணவிகள், தங்கள் திருமண நாளன்றே மணக்கோலத்தில் தேர்வு எழுதினர். இருவரும் தஞ்சையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் பயின்று வருகின்றனர். தங்கள் திருமண நிகழ்வுகளுக்குப் பிறகும் கல்வியில் கவனம் செலுத்திய இவர்களின் அர்ப்பணிப்பு பலரையும் நெகிழ வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி