திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தனது பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கி, புதுச்சேரி, சீர்காழி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் முடித்த அவர், நாளை மறுநாள் (10ம் தேதி) தஞ்சாவூரில் தனது 4-ம் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். அன்று மாலை 5 மணிக்கு தஞ்சாவூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.