தஞ்சைக்கு ரூ. 2. 92 கோடியில் விளையாட்டு உபகரணங்கள்

திருச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்திலும் காணொலி மூலம் இவ்விழா ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 2 மாநகராட்சிகள், 3 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளிலுள்ள 459 வார்டுகளுக்கு தலா ரூ. 44 ஆயிரம் மதிப்புள்ள 30 விளையாட்டு உபகரணங்கள் என மொத்தம் ரூ. 2.92 கோடி மதிப்பில் 732 தொகுப்புகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி