வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக, வாக்காளர்களுக்கு படிவம் பூர்த்தி செய்யவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், விண்ணப்பங்களை வழங்கவும் தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு உதவி மையங்கள் செயல்படும். தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சி, திருவையாறு நகராட்சி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் இந்த மையங்கள் இயங்கும் என ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.