பாபநாசம்: மென்பொறியாளரிடம் ரூ. 9.54 லட்சம் நூதன மோசடி

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரிடம், ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 9.54 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. டெலிகிராம் செயலி மூலம் அறிமுகமான பெண் ஒருவர் அளித்த போலி லிங்க் மூலம், கடந்த நவம்பர் மாதம் 31 தவணைகளாக மொத்தம் ரூ. 9.63 லட்சத்தை அந்த இளைஞர் முதலீடு செய்துள்ளார். இதில் வெறும் ரூ. 8,860 மட்டுமே லாபமாகத் திரும்பக் கிடைத்துள்ளது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

தொடர்புடைய செய்தி