சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற 6 பேர் திருச்சி விமான நிலையத்திலிருந்து மன்னார்குடிக்கு வேன் மூலம் மன்னார்குடி புறப்பட்டனர். வேன் இன்று (ஜூன் 4) அதிகாலை திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது. இதில் விஜயா (42) என்ற பெண் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ஆறுமுகம் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவிலும், மற்ற 4 பேர் லேசான காயங்களுடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.