தஞ்சை: தமிழ்ப் பல்கலையில் கருத்தரங்கம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறையின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பாரதஜோதி தலைமை வகித்தார். துறையின் இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் கவிதா வரவேற்றார். பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம், கோயம்புத்தூர் அமிர்தா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறை உதவிப்பேராசிரியர் ராஜேந்திர குமார் ஆகியோர் பேசினர். 2ம் நாள் நிகழ்வில் அறிவியல் புலத்தின் தலைவர் (பொ) நீலகண்டன் தலைமை வகித்தார். பேராசிரியர் சங்கர். சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரியின் அறிவியல் புலத்தலைவர் எலிசபெத் ராணி ஆகியோர் பேசினர். மணப்பாறை டிஎன்பிஎல் நிறுவன சுற்றுச்சூழல் பிரிவு துணை மேலாளர் பாலன் நீர் மேலாண்மையில் தொழிற்சாலை கழிவுநீரின் சுத்திகரிப்பு பங்கு என்ற தலைப்பில் பேசினார். உதவிப்பேராசிரியர் ராகேஷ் சர்மா நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி