​தஞ்சை: பெரிய கோயிலில் காதல் ஜோடிகளுக்கு அனுமதி மறுப்பு

தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த காதல் ஜோடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்து மக்கள் கட்சியினர் தாலி கயிறுகளுடன் நுழைவு வாயிலில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில், போலீசார் காதல் ஜோடிகளைத் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் பல ஜோடிகள் கோயிலுக்குள் செல்லாமல் வேறு இடங்களுக்குச் சென்றனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி