கல்லணை கொள்ளிடம் பாலத்தில் பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை கொள்ளிடம் ஆற்றில் ரூ. 92 கோடியில் கட்டப்பட்ட புதிய உயர் மட்டப் பாலத்தின் ஒரு பகுதியில் தொடர்ந்து பள்ளம் ஏற்பட்டு வருகிறது. தற்போது கம்பிகள் தெரியும் அளவுக்கு பள்ளம் விழுந்ததால், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. பொதுமக்கள் உடனடியாக இந்தப் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி