தஞ்சாவூர் அருகே வயலூர் சாரப்பள்ளம் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டைக் கண்டித்து, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தஞ்சாவூர் - கும்பகோணம் முதன்மைச் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தஞ்சாவூர் எம்எல்ஏ இரா. விஜய்சரவணன் மற்றும் போலீஸார், உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.