தஞ்சையில் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் மற்றும் நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சாவூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத் தலைவர் கே. எஸ். முகமது இப்ராஹிம் தொடங்கி வைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசின் மேக்கேதாட்டு அணை முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தஞ்சை மாவட்ட பாசன ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களை தூர்வாரவும், மத்திய அரசு உர விலையைக் குறைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி