இதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளை உடனே விசாரித்து நீதி வழங்க வேண்டும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நெடுஞ்சாலையோரம் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சம்மேளனத்தின் மாவட்டச் செயலர் ம. விஜயலட்சுமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. சந்திரகுமார் தொடங்கி வைத்தார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வெ. சேவையா முடித்து வைத்தார். இதில் மாவட்டத் தலைவர் கண்ணகி, துணைத் தலைவர்கள் தனசீலி, மீனாள், துணைச் செயலர் கல்யாணி, மாநகரச் செயலர் ராஜலட்சுமி, ஒன்றியச் செயலர் கலைச்செல்வி, தலைவர் மல்லிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.