தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு மற்றும் மேலத்திருப்பூந்துருத்தி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மே 30-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். இதனால் திருவையாறு, கண்டியூர், மேலத்திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, தில்லைஸ்தானம், பெரும்புலியூர், திருப்பழனம், திங்களூர், கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என திருவையாறு மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.