தஞ்சாவூரில் நாளை (பிப். 10) மின்தடை

தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை செவ்வாய்க்கிழமை (பிப். 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நகரின் முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டி. பி. எஸ் நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், ஆட்சியர் முகாம் அலுவலகச் சாலை, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நடராஜபுரம் காலனி தெற்கு, யாகப்பா நகர், நிர்மலா நகர், காவேரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தொடர்புடைய செய்தி