தஞ்சை அருகே திருமலை சமுத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (18ஆம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வல்லம், செங்கிப்பட்டி, கள்ளப் பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்வினியோகம் தடைபடும் என உதவி செயற்பொறியாளர் பாலகுமார் தெரிவித்துள்ளார். இதனால் நாட்டாணி, வல்லம், திருமலை சமுத்திரம், செங்கிப்பட்டி, புதுக்குடி, ராயமுண்டான்பட்டி, தென்னங்குடி, பிள்ளையார் நத்தம், கரிமேடு, கரம்பை கள்ளப் பெரம்பூர் ஆகிய பகுதிகளும் பாதிக்கப்படும்.