தீக்குளிக்க முயற்சி காவல்துறை விசாரணை

தஞ்சை சீனிவாசன்பிள்ளை சாலையில் ஹேம்குமார் (60) என்பவர் பழக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த கடையின் பின்னால் அவரது வீடு உள்ளது. இவரது மகன் பவுன்ராஜ் (30). இவர்கள் இருவரும் அய்யம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் பெற்றனர். கடனை திருப்பி செலுத்தாததால் வீடும், கடையும் ஜப்தி செய்யப்பட்டது. இந்நிலையில் வங்கி ஊழியர்கள் இந்த நிலப்பரப்பை கையகப்படுத்தும் போது உரிமையாளரும், அவரது மகனும் தங்கள் மீது மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கப்போவதாக கூறினர். தகவலறிந்த கிழக்கு காவல்துறையினர் விரைந்து வந்து இருவரையும் சமாதானம் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி