தஞ்சை: இட ஒதுக்கீடு கேட்டு பாமக வன்னியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். தலைமை நிலைய முன்னால் செயலாளர் கோதை கேசவன், சமூக முன்னேற்ற சங்க ஆலோசகர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 10.5% இட ஒதுக்கீட்டை வழங்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கி ஆயிரம் நாட்கள் ஆன நிலையில் உடனே இட ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி