தஞ்சை மாவட்டத்தில் 813 நீர்நிலைகளில் மண் எடுக்க அனுமதி

தஞ்சை மாவட்டத்தில் விவசாயம், மண்பாண்ட தொழில் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 813 நீர்நிலைகளில் இருந்து வண்டல், களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது. www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் தாசில்தார் மூலம் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி