இதுகுறித்து தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநிலச் சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி தஞ்சாவூர் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க https://thanjavurdcourts.gov.in என்ற இணையதள முகவரியில் வயது வரம்பு, கல்வித்தகுதி, ஊதியம் உள்ளிட்டவற்றை அறிய விண்ணப்பத்தை பதிவிறக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களைத் தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தஞ்சாவூர் 613 007 என்ற முகவரிக்கு மார்ச் 17-க்குள் அனுப்ப வேண்டும்.