பாபநாசம் புதிய வட்டாட்சியர் பதவியேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக பழனிவேலு பதவி ஏற்று கொண்டார். இவர் ஏற்கனவே கும்பகோணம் நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை (திட்டங்கள்) தனி வட்டாட்சியராக பணியாற்றியவர். 

பாபநாசத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்த செந்தில்குமார் பட்டுக்கோட்டை நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை (திட்டங்கள்) தனி வட்டாட்சியராக பணி மாறுதலில் சென்று உள்ளார். புதிதாக பதவியேற்றுள்ள வட்டாட்சியர் பழனிவேலுவை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் பாக்யராஜ், வட்ட தலைவர் ஜெய்சங்கர், வட்ட செயலாளர் பாலாஜி, வட்ட பொருளாளர் சிங்காரவேலன் மற்றும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி