ராமனுக்கும் ராமதூதன் அனுமனுக்கும் ஒரே நாளில் பாலாலயவிழா நடைபெற்றது அபூர்வமான ஒன்றாகும். விஜயராமர் மற்றும் மூலை அனுமாருக்கு பாலாலயத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இக்கோயில்களில் கும்பாபிஷேகம் திருப்பணிகள் செய்ய விரும்பும் பக்தர்கள் அரண்மனை தேவஸ்தானம் அலுவலகத்தை அணுகவும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர்கள் சத்யராஜ், மணிகண்டன் மற்றும் கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.