ஒரத்தநாடு: மூதாட்டியை கொலை செய்தவர் சிக்கினார்

ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் கீழநத்தத்தைச் சேர்ந்த மனோன்மணி (83) என்ற மூதாட்டி, குடும்பத் தகராறில் அவரது அக்கா மகன் சக்திவேல் (57) என்பவரால் வாயில் துணி அமுக்கிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகத் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்த சக்திவேலை, ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி