ஒரத்தநாடு: லேத் பட்டறை உரிமையாளர் விபத்தில் பலி

ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் வெல்டிங் பட்டறை உரிமையாளர் ப. மகேந்திரன் (40). இவர் வியாழக்கிழமை மாலை தனது பட்டறைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த தாலுகா போலீசார், அவரது உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி