தஞ்சையில் போலி உரங்களை கண்டுபிடித்த அலுவலர் பணியிட மாற்றம்

தஞ்சாவூர் மாவட்ட வேளாண் உதவி இயக்குனராக (தரக்கட்டுப்பாடு) பணியாற்றி வந்த செல்வராஜ், கடந்த 3-4 மாதங்களாக போலி உரங்கள் தயாரிப்பு, விற்பனை மற்றும் இயற்கை உரங்கள் பெயரில் போலி உரங்களை இருப்பு வைத்தல் போன்ற முறைகேடுகளை கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுத்தார். மேலும், ரசீது இன்றி கூடுதல் விலைக்கு உரங்கள் விற்றவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், அவர் நேற்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, பூதலூர் வேளாண்மை அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். இந்த இடமாற்றத்தில் அரசியல் தலையீடு இருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நேர்மையாக செயல்பட்ட அதிகாரியை பணியிட மாற்றம் செய்தது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி