தஞ்சாவூர் அருகே சாலையின் இருபுறமும் இருக்கும் கருவேல மரங்கள்

தஞ்சாவூர் மாவட்டம், சிவகாமிபுரத்திலிருந்து பிள்ளையார்நத்தம் செல்லும் முக்கியச் சாலையின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்கள் மற்றும் முள் செடிகள், தார்ச்சாலையை மறைத்து, வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் போவதாலும், முட்கள் கீறுவதாலும் வாகன ஓட்டிகள், விவசாயிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், புதர்கள் மண்டியிருப்பதால் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த முள்செடிகளை அகற்றிச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி