தஞ்சையில் புதிய மின்மாற்றி தொடங்கி வைப்பு

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை உராட்சி இந்திரா நகர் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தஞ்சை எம்எல்ஏ நீலமேகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற எம்எல்ஏ மின்வாரிய உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று அங்கு புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து இந்திரா நகர் பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நடந்தது. புதிய மின்மாற்றியை தஞ்சை எம்எல்ஏ நீலமேகம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராஜா, அவை தலைவர் கோவிந்தராஜ், ஜெயபால், காவேரி நகர் கோவிந்தராஜ், ரவி, ராஜா, லாரன்ஸ், தென்னரசு, பாலு, துரை, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் வண்டார் குழலி, ரேவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த மின்மாற்றி காரணமாக தடையின்றி மின்சாரம் கிடைக்கும் என்பதால் இந்திரா நகர், சண்முகா நகர், பொன்னி நகர் மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி