தஞ்சை: ராசா மிராசுதார் மருத்துவமனை புதிய கட்டடம் விரைவில் திறப்பு

தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய புறநோயாளிகள் பிரிவை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். இந்த கட்டிடம் 100 படுக்கை வசதிகளுடன் 40 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.10 கோடிக்கு கட்டிடமும், ரூ.2 கோடிக்கு மருத்துவ உபகரணங்களும் அமைக்கப்படவுள்ளது. இந்த பணிகள் மூன்று வாரத்தில் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் திறந்து வைப்பார் என அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி