ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. இதில், சுமார் 80க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்தபடியும், 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுடன் ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர். இதில், போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்தும், போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து தங்களுடைய சுயவிவரங்களை வெளிப்படுத்தாமல் புகார் செய்வதற்கு DRUGFREETN என்ற அலைபேசி செயலியை பதிவிறக்கம் செய்வது தொடர்பான ஒட்டுவில்லைகளை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அனைத்து ஆட்டோக்களிலும் ஒட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயசங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆனந்த், பாபு, சரவணன், உதவிக் கோட்டப் பொறியாளர் கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கலால்)(பொ) பூஷணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.