தஞ்சாவூரில் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம். எல்) ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இடதுசாரி கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் சின்னை. பாண்டியன், மு. அ. பாரதி, கோ. சக்திவேல், கே. மாசிலாமணி ஆகியோர் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் அக்கட்சிகளின் மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி