தஞ்சாவூரில் பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவரும், தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினருமான முனைவர் வா. மு. சே. முத்துராமலிங்க ஆண்டவர் தொகுத்து பதிப்பித்த, 'கலைஞர் ஒரு முத்தமிழ்ப் பல்கலைக்கழகம்' என்ற நூலை வெளியிட்ட உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்அவர் மேலும் பேசியது:கருணாநிதி எழுதும்போது உருவான சிந்தனையைத் திரைப்படமாக்கினார். கால ஓட்டச்காலஓட்டச் சூழ்நிலையில் அரசியலில் வெற்றி பெற்று முதல்வராகிறார். அதன் பிறகு அன்றைக்கு எழுதிய அதே தாக்கம், அவரது உள்ளத்தில் இருந்ததால், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தை ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் செயல்படுத்தினார். நினைத்ததை எழுதுவது, அதைச் சட்டமாக்கி, மக்களுக்கு வாழ்வளிப்பது என்ற கொள்கையை கருணாநிதி கடைப்பிடித்தார். இதுபோல,இதுபோல், இந்தியாவில் வேறெந்த தலைவரையும் அடையாளம் காட்ட முடியாது" என்றார் அமைச்சர்.