தேர் வராததால் தஞ்சாவூரில் ஜூலை. 30 ல் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர் தாலுகா, வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு ஏகவுரியம்மன் கோயில், முத்து மாரியம்மன், சுப்ரமணிய சுவாமி கோவில்களின் திருவிழாக் காலங்களில், தேர் வீதி உலா, பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு தொடர்ச்சியாக வருவதில்லை.  
ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று நடைபெறும் திருவிழாவில், பட்டியல் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.  
இந்நிலையில், பட்டியல் சமூக மக்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம், திருவிழா காலங்களில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு தேர் வருவதில்லை என்றனர். பொதுமக்கள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார்,   தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் கே. அபிமன்னன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் ஆர். கலைச்செல்வி, மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 
தீண்டாமை ஒழிப்பு முன்னணி -சிபிஎம் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  வரும் ஜூலை 30 செவ்வாய் அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி - சிபிஎம் சார்பில், பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களோடு இணைந்து, தஞ்சாவூர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது" என முடிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி