தஞ்சையில் கௌரவ விரிவுரையாளர்கள் 'கண்கட்டி' போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வருகின்றனர். தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி கல்லூரி விரிவுரையாளர்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். குந்தவை நாச்சியார் கல்லூரியிலும் 2-வது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுஜிசி நிர்ணயித்தபடி மாத ஊதியமாக ₹57,800 வழங்க வேண்டும், ஆண்டு முழுவதும் ஊதியம், பெண் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, ஓய்வு பெறுபவர்களுக்கு ₹25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதனால் கல்லூரிகளில் கல்விப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி