தஞ்சாவூரில், தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையிலும், அவரை "மாண்புமிகு அமைச்சர்" எனக் குறிப்பிட்டு நகரின் பல இடங்களில் போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செய்தி ஊடகங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, தற்போது அந்தப் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.