தஞ்சாவூரில் இந்து முன்னணியினர் கைது

தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில், இந்து முன்னணி சார்பில் மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி கந்த சஷ்டி கவசம் பாடி, வேல் வைத்து பூஜை நடத்தப்பட்டது. இது தொடர்பாக கோவில் செயல் அலுவலர் சிவராஜன் அளித்த புகாரின் பேரில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசானசிவம் உள்ளிட்ட 7 இந்து முன்னணி கட்சியினரை தஞ்சை தெற்கு போலீசார் அனுமதியின்றி வழிபாடு நடத்தியதாகக் கூறி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி