பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலர் எம். இளங்கோவன் நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை சுகாதார ஆய்வாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் வை. இராஜா, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். அன்பரசன், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் இரா. பாலமுருகன், முன்னாள் மாநிலப் பொதுச் செயலர் எஸ். ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், போர்க்கால அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 2 ஆயிரத்து 715 சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களுக்கான ஒப்புதல் கேட்டு இயக்குநரால் அரசுக்கு அனுப்பப்பட்ட கருத்துருவுக்கு உடனடியாக ஒப்புதல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.