திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நாளை குரு பெயர்ச்சி விழா

தஞ்சாவூர் அருகே உள்ள புகழ்பெற்ற திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் நாளை (மே 26) காலை 11 மணிக்குக் குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறவுள்ளது. மேலும், ஜூன் 3-ல் லட்சார்ச்சனையும், ஜூன் 5 முதல் 7 வரை சிறப்புப் பரிகார ஹோமங்களும் நடைபெறும். இந்த இடப்பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி