தஞ்சையில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பச்சைப்பயறு கொள்முதல்

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் 35 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 9 ஆம் தேதி வரை தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கிலோ ரூ. 87. 68 வீதத்தில் கொள்முதல் நடைபெறும். விருப்பமுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்கள் மற்றும் கைரேகைப்பதிவுடன் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து, நேரடி வங்கிப் பரிமாற்றம் மூலம் இதன் பலனைப் பெறலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி