தஞ்சை மாவட்டத்தில் நாளை 589 கிராமங்களில் கிராமசபைக் கூட்டம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 589 கிராம ஊராட்சிகளிலும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11:00 மணியளவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டங்களில் கிராமப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. ரேவதி கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி