மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தஞ்சை வடக்கு வட்டம் சார்பில் பனகல் கட்டிட வளாகத்தில் வட்டச் செயலாளர் அஜய்ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் நிர்வாகிகள் தமிழ்வாணன், பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட இணைச் செயலாளர் கருணாநிதி நிறைவுரையாற்ற, வட்ட இணைச் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.