இதில் 905 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். 346 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டிகேஜி நீலமேகம், மேயர் சண் ராமநாதன், மாநகராட்சி மண்டல குழு தலைவர் மேத்தா, சதய விழா குழு தலைவர் செல்வம், மாமன்ற உறுப்பினர்கள், அரசியல், வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர்கள் குமார், செல்வகுமார் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். முன்னதாக சுப்ரமணிய சர்மா வரவேற்றார். நிறைவாக பிரதீக் கவுர் நன்றி கூறினார்.